முதல்-அமைச்சரின் நிகழ்ச்சிக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்


முதல்-அமைச்சரின் நிகழ்ச்சிக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்
x

முதல்-அமைச்சரின் நிகழ்ச்சிக்காக பனை மரங்கள் வெட்டப்பட்டதா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

தென்காசி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகளுக்காக ஏராளமான பனை மரங்கள் சட்டத்துக்கு புறம்பாக வெட்டப்பட்டதாக செய்தி பரப்பப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்திருக்கிறது.

அதில், ‘இது தவறான தகவல். 2 தனிநபர்கள் தங்களின் பட்டா நிலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 4 பனை மரங்களை உரிய அனுமதி பெற்று வெட்டியுள்ளனர். அதற்கு இணையாக அரசாணை 238-ன்படி, ஒரு மரத்துக்கு 10 என்ற வீதத்தில் 40 பனை மரக்கன்றுகளை நட்டு வளர்த்திடவும் மாவட்ட கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story