விஜய் பேசியது சினிமா வசனம் போல் தான் தெரிகிறது-ப.சிதம்பரம் கருத்து


விஜய் பேசியது சினிமா வசனம் போல் தான் தெரிகிறது-ப.சிதம்பரம் கருத்து
x

பாசிசம், பாயாசம் என்று விஜய் பேசியது சினிமா வசனம் போல் தான் தெரிகிறது என்று ப.சிதம்பரம் கூறினார்.

சென்னை,

சென்னை தியாகராய நகரில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

விஜய் நடத்திய மாநாட்டில் அவர் பேசியதில் சில மகிழ்ச்சி தருகிறது. சில வாசகங்கள் மகிழ்ச்சி தரவில்லை. எதுவாக இருந்தாலும் அவர் கட்சி தொடங்கியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள். தமிழக அரசியலில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை தேர்தல் தான் முடிவு செய்யும். ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பதை இப்போது எப்படி சொல்ல முடியும்?.

ஒரு காலத்தில் மத்தியில் தனிக்கட்சி தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் இருந்தது. 1996-க்கு பிறகு பல கட்சிகள் ஆட்சி செய்கிறது. சாத்தியமில்லாதது எல்லாம் ஒரு காலத்தில் சாத்தியம் ஆகலாம். எனவே, இதுகுறித்து போகப்போகத் தான் சொல்ல முடியும். பாசிசம், பாயாசம் என்று விஜய் பேசியது சினிமா வசனம் போல் தான் தெரிகிறது. சினிமா வசனத்தை எல்லாம் கொள்கையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story