கூட்டணி யாருடன்? பிரேமலதா விஜயகாந்த் பதில்


கூட்டணி யாருடன்? பிரேமலதா விஜயகாந்த் பதில்
x
தினத்தந்தி 23 May 2025 12:23 PM IST (Updated: 23 May 2025 1:31 PM IST)
t-max-icont-min-icon

2026-ல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தூத்துக்குடி,

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் மிகப்பெரிய மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து எல்லா முடிவுகளையும் அறிவிப்போம் என்று தெரிவித்தார்.கூட்டணி யாருடன்? என்ற கேள்விக்கு, 2026ல் ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவை அறிவிப்போம் என்றார்.

மேலும் அமலாக்கத்துறை சோதனை குறித்த கேள்விக்கு, "தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.மக்களின் வரிப்பணத்தை லஞ்சமாகவோ, ஊழலாகவோ பயன்படுத்தினால், கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும்.கேப்டன் கூறியபடி, லஞ்சம், ஊழல் இல்லாத நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

நீட் தேர்வு, டாஸ்மாக் ஒழிப்பு, விலைவாசி குறைப்பு எனப் பல வாக்குறுதிகளை ஆளும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை," என்று கூறினார்.

இன்னும் தேர்தலுக்கு எட்டு, ஒன்பது மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் அவர்கள் ஏதாவது செய்வார்களா என்று பார்ப்போம்.அப்படிச் செய்யவில்லை என்றால், மக்கள்தான் எஜமானர்கள்; 2026-ல் நல்ல தீர்ப்பைக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வினர் குறித்து பா.ஜ.க-வினர் விமர்சிக்கக் கூடாது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, கூட்டணி அமைத்த பிறகு, அதற்குள் சலசலப்பு வந்துவிட்டால், கூட்டணி பிரிய வாய்ப்புகள் உள்ளன. அதனால், கருத்துகள் சொல்வதை அவர்கள் கட்டுப்படுத்துகின்றனர் என்று பதிலளித்தார்.

1 More update

Next Story