ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர் ஒருவர், கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார்.
ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
Published on

சேலம்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுலைமான்கான். இவருடைய மனைவி ரஜியாபானு (வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கிருஷ்ணகிரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து திருப்பூர் செல்வதற்காக சென்னையில் இருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அப்போது அந்த ரெயிலில் பயணம் செய்த வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர் குமரேசன் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தார். பின்னர் அந்த பெண்ணுக்கு ஓடும் ரெயிலில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் பொம்மிடி ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் பச்சிளம் குழந்தையுடன் ரஜியாபானு பையர்நத்தம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com