இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை
x
கோப்புப்படம் 
தினத்தந்தி 7 May 2025 10:33 PM IST (Updated: 7 May 2025 10:34 PM IST)
t-max-icont-min-icon

உறவினர்களுக்கு 'வாட்ஸ்அப்'பில் தகவல் அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரில் உள்ள அருந்ததியர் பாளையம் செஞ்சி சாலையில் வசித்து வருபவர் விஜயகுமார். சென்னையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யா (24 வயது). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளாகிறது. அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று சவுந்தர்யா தனது உறவினர்களுக்கு தற்கொலை செய்யப்போவதாக 'வாட்ஸ்அப்'பில் தகவல் அனுப்பிவிட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாட்ஸ்அப்பில் தகவலை பார்த்து வீட்டுக்கு வந்த அவரது அக்கா, சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சவுந்தர்யாவின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். அங்கு அவர் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார். அதனை போலீசார் கைப்பற்றினர். அதில் "என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என எழுதி வைத்திருந்தார். இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story