காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை


காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை
x

தூத்துக்குடியில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சகாயபுரம் 7வது தெருவைச் சேர்ந்தவர் பினோ. இவரது மனைவி ஜெமிலா (வயது 25). இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ஜெமிலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தென்பாகம் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து டவுன் ஏ.எஸ்.பி. மதன் வழக்குப்பதிவு செய்தார். கோட்டாட்சியர் பிரபு விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story