ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை: போலீஸ் விசாரணை


ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை: போலீஸ் விசாரணை
x

கோவில்பட்டியில் அந்தியோதயா ரெயில் முன் விழுந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரம் மேம்பாலம் அருகே வள்ளிமுத்து பள்ளி பின்புறம் உள்ள தண்டவாளப் பாதையில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை செல்லும் அந்தியோதயா ரெயில் முன் விழுந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெயில் வண்டியின் கார்டு கோவில்பட்டி ரெயில் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து இருப்பு பாதை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினார். இறந்தவருக்கு சுமார் 25 வயது இருக்கும், அவர் யார்? எதற்காக தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. அவரிடம் அடையாள அட்டைகள் மற்றும் உடைமைகள் எதுவும் காணப்படவில்லை. இதுகுறித்து இலுப்பையூரணி கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி ரெயில்வே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story