தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த ஒரு வாலிபர், கடந்த 6 மாதங்களாக வீட்டுக்கு செல்லாமல் சாலையில் சுற்றி திரிந்து வந்தாராம்.
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Published on

தூத்துக்குடி அண்ணாநகர் 10வது தெருவைச் சேர்ந்த பாதாளமுத்து மகன் சுடலைமுத்து (வயது 18). இவர் கடந்த ஆறு மாதங்களாக வீட்டுக்கு செல்லாமல் சாலையில் சுற்றி திரிந்து வந்தாராம். இநத நிலையில் நேற்று முன்தினம் மதியம் அவர் ஜார்ஜ் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்துக்குள் சென்றுவிட்டு வெளியே வருவதற்காக சுவர் ஏறி குதிக்க முயன்றுள்ளார்.

அப்பேது அருகில் இருந்த மின்வயர் மீது அவரது உடல் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com