6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
6 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இரவு 10 மணி வரை தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com