மசூலிப்பட்டினத்திற்கு 70 கி.மீ. தொலைவில் மோந்தா புயல்

புயலின் வேகம் மணிக்கு 12கி.மீ. ஆக குறைந்துள்ளது
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதேவேளை, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயலாக உருமாறியுள்ளது. அதற்கு மோந்தா புயல் என பெயரிடப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், தீவிர புயலாகவே இன்று இரவில் கரையைக் கடக்கிறது. புயலின் வேகம் மணிக்கு 12கி.மீ. ஆக குறைந்துள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே மோந்தா புயல் கரையைக் கடக்கும்.
தற்போது மோன்தா புயல் மசூலிபட்டடினத்திற்கு தெற்கு- தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து தெற்கு- தென்மேற்கே 150 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு- தென்மேற்கே 250 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்மேற்கே 480 கி.மீ. தொலைவிலும் ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து தெற்கு-தென்மேற்கே 480 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலால் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காக்கிநாடா, மசிலிப்பட்டினம்,குண்டூர், காவாளியில் கனமழை பெய்து வருகிறது. புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஒடிசா அரசும், ஆந்திர அரசும் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






