தமிழகத்தில் 4 இடங்களில் இன்று சதமடித்த வெயில்

குறிப்பாக பகல் நேரங்களில் மக்களால் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்து வந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கரூர் பரமத்தி 100.76 டிகிரி, மதுரை விமான நிலையம் 100.4 டிகிரி, தஞ்சாவூர் 102.2 டிகிரி மற்றும் வேலூர் 100.22 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 6-ந்தேதி வரை ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






