சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை


சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை
x

சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது

சென்னை,

சென்னை, தென்தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது . ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் , அண்ணா சாலை , மணலி, மாதவரம், புழல் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


Next Story