தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை,
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
Related Tags :
Next Story






