காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது


காற்றழுத்த தாழ்வுபகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
x

மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திரா அருகே நாளை கரை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

வங்கக் கடலில் நிலவிய இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிசாவையொட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரம் அருகே நாளை (ஆக. 19) கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 2 நாள்களுக்கு தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது.

1 More update

Next Story