நைஜீரியா: ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 25 பேர் பலி


நைஜீரியா: ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 25 பேர் பலி
x

படகு விபத்தில் 14 பேர் மாயமாகினர்.

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் யொபி மாகாணத்தில் உள்ள யொபி ஆற்றில் நேற்று இரவு படகு சென்றுகொண்டிருந்தது. கர்பி நகரில் உள்ள சந்தைக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு 52 பேர் படகில் பயணித்தனர். இரவு பயணித்தபோது எதிர்பாராத விதமாக படகு ஆற்றில் கவிந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் மாயமாகினர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், ஆற்றில் தத்தளித்த 13 பேரை உயிரிழந்தனர். அதேவேளை, மாயமான 14 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story