பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் 40 பேருக்கு சிறை


பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் 40 பேருக்கு சிறை
x

இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் நடந்த இந்த போராட்டத்தில் பல கோடிக்கணக்கான பொதுச்சொத்துகள் சேதமாகி தீவைத்து எரிக்கப்பட்டன

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இம்ரான்கான் இருந்தார். இந்தநிலையில் வெளிநாட்டு பரிசு பொருட்களை குவித்த 'தோஷ்கானா' வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டு அபோட் சிறையில் கடந்த 2022-ம் ஆண்டு அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கான் ஆதரவாளர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் 2023-ம் ஆண்டு ஈடுபட்டனர்.

தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் நடந்த இந்த போராட்டத்தில் பல கோடிக்கணக்கான பொதுச்சொத்துகள் சேதமாகி தீவைத்து எரிக்கப்பட்டன. சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இதுதொடர்பாக இஸ்லாமாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக இம்ரான்கானின் கட்சியான தெரிக்-இ-பாகிஸ்தான் கட்சி முக்கிய தலைவர்கள் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 10 தலா ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story