இந்தோனேசியா: மதவழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு - 54 பேர் காயம்

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா.
ஜகார்தா,
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் கலபா கார்டிங் பகுதி உள்ளது. இங்கு இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த மசூதியில் மதப்பள்ளியும் உள்ளது.
இந்நிலையில், இந்த மத வழிபாட்டு தலத்தில் இன்று ஏராளமான இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது, மத வழிபாட்டு தலத்தில் திடீரென குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு அங்கிருந்த பள்ளியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டு வெடிப்பில் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள், மதப்பள்ளி மாணவர்கள் உள்பட 54 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






