ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்: ஜனாதிபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு

ஜனாதிபதி முர்முவுக்கு விமான நிலையத்தில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
லூவாண்டா,
ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக சென்றார். அங்குள்ள அங்கோலா மற்றும் போஸ்ட்னியாவுக்கு செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றார். முதலாவதாக அங்கோலா சென்ற முர்மு தலைநகர் லூவாண்டாவுக்கு தனி விமானத்தில் சென்றடைந்தாா். அவருக்கு விமான நிலையத்தில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னா் அதிபர் மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் ஜோஜோ மானுவேலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளிடையே ராணுவம் மற்றும் வர்த்தக உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. தொடர்ந்து அந்தநாட்டின் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து போஸ்ட்னியாவுக்கு அரசுப்பயணம் மேற்கொள்கிறார். பின்னர் 13-ந்தேதி நாடு திரும்புகிறார்.
Related Tags :
Next Story






