30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு: ஊழியர்கள் அதிர்ச்சி


30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் முடிவு: ஊழியர்கள் அதிர்ச்சி
x

உலகம் முழுவதும் அமேசான் நிறுவனத்தில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஐடி துறையில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால், ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

டிசிஎஸ், காக்னிசண்ட், மைக்ரோசாப்ட், மெட்டா உள்பட பல நிறுவனங்கள் ஊழியர்களை கணிசமான எண்ணிக்கையில் நீக்கி வருகிறது. இந்த நிலையில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான அமேசானும் இந்தபட்டியலில் இணைந்துள்ளது. மென்பொருள், கிளவுட் சேவை, இ காமர்ஸ் என பல்வேறு துறைகளில் கோலோச்சி வரும் அமேசான் நிறுவனத்தில் 30 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். உலகம் முழுவதும் அமேசான் நிறுவனத்தில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். இதில் 10 சதவீத ஊழியர்களே பணி நீக்கம் செய்ய இருப்பதாக அமேசான் கூறியுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2022ம் ஆண்டு முதல் ஊழியர்கள் 27 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்த இந்த பணி நீக்க நடவடிக்கை அமேசான் ஊழியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா காலத்தில் அதிகப்படியான ஊழியர்கள், தேவைக்கு அதிகமாக ஆட்சேர்ப்பு நடைபெற்றதாகவும் அதனை குறைத்து செலவை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மறுகட்டமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் அமேசான் தரப்பில் சொல்லப்படுகிறது.

1 More update

Next Story