‘நாசா’ தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமனம்


‘நாசா’ தலைவராக எலான் மஸ்க் ஆதரவாளர் மீண்டும் நியமனம்
x
தினத்தந்தி 6 Nov 2025 9:44 AM IST (Updated: 6 Nov 2025 11:56 AM IST)
t-max-icont-min-icon

டிரம்ப்-எலான் மஸ்க் உறவு இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், நாசாவின் தலைவராக ஜேரட் ஜசக்மேன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் தேர்வானார். தேர்தலில் உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரபல பணக்காரருமான எலான் மஸ்க், டிரம்ப் கட்சிக்கு ஆதரவாக கோடிக்கணக்கில் தேர்தல் நிதி வழங்கினார். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றபோது சிறப்பு இலாகா ஒன்றை உருவாக்கி எலான் மஸ்குக்கு பொறுப்பு கொடுத்தார்.

மேலும் எலான் மஸ்கின் கூட்டாளியும், தீவிர ஆதரவாளருமான ஜேரட் ஐசக்மேன் என்னும் தனியார் விண்வெளி ஆராய்ச்சியாளருக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. இதனிடையே டிரம்ப் உடனான நட்பில் உரசல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் ஏப்ரலில் விலகினார்.

இதனை தொடர்ந்து ஐசக்மேனின் நாசா தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டது. இந்த நிலையில் டிரம்ப்-எலான் மஸ்க் உறவு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதற்கு சான்றாக நாசாவின் தலைவராக ஜேரட் ஜசக்மேனை மீண்டும் நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story