தாய்லாந்து கடற்கரையில் இங்கிலாந்து பெண் சுற்றுலா பயணி சடலமாக மீட்பு

தகவலறிந்த போலீசார், ஆலிசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாங்காக்,
இங்கிலாந்தை சேர்ந்த 54 வயதான ஆலிசன் என்ற பெண் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் தாய்லாந்தின் சுரத் தனி மாகாணம் சோ பஹொ கடற்கரைக்கு நேற்று முன் தினம் இரவு தனியே கடலில் குளிக்க சென்றுள்ளார்.
இந்நிலையில், குளிக்கச்சென்ற ஆலிசன் நேற்று காலை கடற்கரையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், ஆலிசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுபோதையில் ஆலிசன் கடலில் குளித்ததாகவும், அப்போது அலையில் சிக்கி அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, ஆலிசன் மரணத்தில் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






