ஹிஸ்புல்லா உளவுத்துறை தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்


ஹிஸ்புல்லா உளவுத்துறை தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்
x

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின்மீது இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியது

பெய்ரூட்,

லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியது.

இதில், ஹிஸ்புல்லாவில் முக்கிய அதிகாரிகளான எல்ஹாக் அப்பாஸ் சலாமேஹ், ராச்சா அப்பாஸ் இச்சா மற்றும் அஹமது அலி ஹசின் ஆகிய மூன்று பேர் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இலக்கில் பெய்ரூட் சுரங்கத்தில் செயல்பட்டுவந்த ஆயுதங்கள் பழுதுநீக்கும் தளமும் அழிக்கப்பட்டுள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


Next Story