முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி


முதன் முறையாக டால்பின் சரணாலயத்தை அமைக்கும் இத்தாலி
x

இத்தாலியில் டால்பின் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

ரோம்,

கடலில் வாழும் டால்பின்கள் மனிதனின் சிறந்த நண்பனாக அறியப்படுகிறது. ஆனால் கடல் மாசுபாடு காரணமாக டால்பின்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல கடல் பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. இதனால் டால்பின்களின் வாழிடங்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டால்பின்களுக்கான சரணாலயத்தை அமைக்க இத்தாலி அரசாங்கம் முடிவு செய்தது. இதற்காக சான் பாலோ தீவு அருகே டரோன்டோ வளைகுடாவில் கடந்த 2023-ம் ஆண்டு அரசாங்கம் அனுமதி வழங்கியது.

இயற்கையான சூழலில் அமைக்கப்பட்டு வரும் இந்த சரணாலயம் அமைக்கும் பணி தற்போது முடியும் நிலையில் உள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த ஆண்டு இந்த சரணாலயம் திறக்கப்படும் என இத்தாலி சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story