விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்கள்; விமான சேவை நிறுத்தம்

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு லித்துவேனியா
விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்கள்; விமான சேவை நிறுத்தம்
Published on

வில்னியஸ்,

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு லித்துவேனியா. நேட்டோ அமைப்பின் உறுப்பினரன இந்நாடு பெலாரஸ் அருகே உள்ளது. உக்ரைன் - ரஷியா போரில் லித்துவேனியா உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை ரஷியாவுக்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், லித்துவேனியாவின் தலைநகர் வில்னியசில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று இரவு மர்ம பலூன்கள் பறந்தன. இதனால் பாதுகாப்பு நலன் கருதி வில்னியஸ் விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த ஹீலியம் பலூன்கள் மூலம் பெலாரஸ் எல்லை வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக லித்துவேனியா குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இந்த கடத்தலுக்கு பெலாரசில் செயல்பட்டு வரும் அதிபர் அலெக்சாண்டர் தலைமையிலான அரசு துணை புரிவதாகவும் லித்துவேனியா குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் இதுபோன்று மர்ம பலூன்கள் லித்துவேனியா வான்பரப்புக்குள் நுழைந்ததால் வில்னியசிஸ் விமான நிலையத்தில் விமான சேவை 4 முறை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com