நைஜீரியாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து: 17 மாணவர்கள் பலி


நைஜீரியாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து: 17 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 7 Feb 2025 5:56 AM IST (Updated: 7 Feb 2025 5:21 PM IST)
t-max-icont-min-icon

நைஜீரியாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர்.

அபுஜா,

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் சம்பாரா மாகாணம் கவுரா நமோடா நகரில் இஸ்லாமிய மதப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதியில் தங்கி மதப்பாடம் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி விடுதியில் நேற்று முன் தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் விடுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்தனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து விடுதியில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டனர். ஆனால், இந்த தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story