இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்திய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த நேபாளம் அனுமதி மறுத்து இருந்தது.
இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு
Published on

காத்மாண்டு,

 இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் பொருளாதாரம், சுற்றுலா வருவாயை நம்பியே உள்ளது. அந்த நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா வருவாயாக இந்திய சுற்றுலா பயணிகள் இருந்து வருகின்றனர். அங்கு இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவது அமலில் இருந்தநிலையில் 2016-ம் ஆண்டுக்கு பின்னர் அதற்கு தடைவிதிக்கப்பட்டது.

ரூ.100 மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் கீழான மதிப்புடைய காசுகள் ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. அதுவும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள சில திருத்தங்களையடுத்து, இந்திய ரூபாய்களை மீண்டும் அனுமதிக்க நேபாள மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இதன்படி, ரூ.100 மற்றும் அதற்கு மேல் மதிப்புடைய ரூ.200, ரூ.500 இந்திய பணநோட்டுகளை பயன்படுத்தி நேபாளத்தில் பரிவர்த்தனை செய்ய முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com