பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு


பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2025 3:38 PM IST (Updated: 13 Oct 2025 3:45 PM IST)
t-max-icont-min-icon

2025-ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாக்ஹோம்,

உலகின் மிகவும் உயர்ந்த நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுக்குரியவர்கள் கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 2025-ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக ஜோயல் மோகிருக்கும், படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக (The theory of sustained growth through creative destruction) அகியோன் மற்றும் ஹோவிட்டுக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story