சோமாலியா கடலோரம் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல்


சோமாலியா கடலோரம் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல்
x

courtesy:  ai image

இங்கிலாந்து நாட்டு ராணுவத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகளுக்கான மையம், அந்த பகுதியில் செல்ல கூடிய கப்பல்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

லண்டன்,

சோமாலியா நாட்டில் சமீப நாட்களாக கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில், மால்டா நாட்டு கொடியுடன் கூடிய கப்பல் ஒன்றை சோமாலியா கடற்கரையோரம் வைத்து கடற்கொள்ளையர்கள் இன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக இங்கிலாந்து நாட்டு ராணுவத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகளுக்கான மையம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த பகுதியில் செல்ல கூடிய கப்பல்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இதேபோன்று, ஆம்ப்ரே என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனமும் கூட, தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளது. இதன்படி, கப்பலை இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும், ராக்கெட் எறிகுண்டுகளை கொண்டு தாக்கவும் செய்த அவர்கள் பின்னர் கப்பலில் ஏறியுள்ளனர். தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.

1 More update

Next Story