சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்த விமானம் - 2 பேர் பலி


சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்த விமானம் - 2 பேர் பலி
x
தினத்தந்தி 14 Oct 2025 2:15 AM IST (Updated: 14 Oct 2025 2:15 AM IST)
t-max-icont-min-icon

சாலையில் சென்ற லாரி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் அலையன்ஸ் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. டாரன் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் அங்குள்ள நெடுஞ்சாலையில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 2 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். அப்போது அந்த சாலையில் சென்ற லாரி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தன. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.

1 More update

Next Story