இலங்கை அதிபராக தேர்வான அனுரா குமார திசநாயகேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


இலங்கை அதிபராக தேர்வான அனுரா குமார திசநாயகேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 23 Sept 2024 9:48 AM IST (Updated: 23 Sept 2024 10:30 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார்.

புதுடெல்லி,

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் இலங்கையின் 9-வது அதிபராக அனுரா குமார திசநாயகே பதவியேற்க உள்ளார். அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம் என அனுரா குமார திசநாயகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அனுரா குமார திசநாயகேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். இந்தியாவின் அண்டை நாடுகளில் பாலிசி மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை சிறப்பு இடம் பெற்றுள்ளது. இந்திய மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், உங்களுடன் நெருக்கமாக பணியாற்றவும் ஆவலாக உள்ளேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story