மாலி நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையால் பள்ளி, கல்லூரிகள் மூடல்

நாடு முழுவதும் வருகிற 10-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக கல்வித்துறை மந்திரி அமடோ சை சவானே அறிவித்துள்ளார்.
Mali Flag- Image for representation
Mali Flag- Image for representation
Published on

பமாக்கோ,

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அதில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கிளர்ச்சி குழு எரிபொருள் இறக்குமதியை தடை செய்ய போவதாக அறிவித்தனர். அதன்படி அண்டை நாடுகளில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் நூற்றுக்கணக்கான எரிபொருள் லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை நிலவியது. இதனை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்தது.

இதற்கிடையே அண்டை நாடான புர்கினோ பாசோ, நைஜர் நாடுகளின் உதவியுடன் லாரியில் எரிபொருள்கள் கொண்டு வரப்பட்டன. இதனை வாங்குவதற்காக தலைநகர் பமாக்கோவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனினும் எரிபொருள் பற்றாக்குறையால் வாகனங்கள் இயக்குவதில் சிக்கல் நிலவுகிறது. எனவே நாடு முழுவதும் வருகிற 10-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக கல்வித்துறை மந்திரி அமடோ சை சவானே அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com