சார், தயவுசெய்து உங்களை நான் பார்க்க முடியுமா? என பிரதமர் மோடி கேட்டார் - டிரம்ப் கிண்டல்

வரி விதிப்புகளால் நாம் பணக்காரர்களாக ஆகிவிட்டோம் என டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், குடியரசு கட்சியின் உறுப்பினர்களுடனான வருங்கால திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, அபாச்சி ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஆர்டர் கொடுத்திருந்தது. ஆனால், 5 ஆண்டுகளாக அவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் கிடைக்கவில்லை.
அப்போது, பிரதமர் மோடி என்னிடம் வந்து, சார், தயவுசெய்து உங்களை நான் பார்க்க முடியுமா? என கேட்டார். அந்த சூழலை உடனடியாக புரிந்து கொண்ட நான், அவருக்கு ஒத்திசைவாக பதிலளித்தேன். அவருடன் நான் நல்ல வகையிலான உறவை கொண்டிருக்கிறேன் என கூறினார்.
தொடர்ந்து அவர், வரி விதிப்புகளால் பிரதமர் மோடி தன் மீது மகிழ்ச்சியற்று இருக்கிறார். ஏனெனில், உங்களுக்கே தெரியும். அவர்கள் தற்போது நிறைய வரி செலுத்தி கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் எண்ணெய் வாங்குவதில்லை.
அவர்கள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது பெரிய அளவில் குறைந்து விட்டது என்றார். வரி விதிப்புகளால் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் பற்றி குறிப்பிட்ட அவர், நாம் பணக்காரர்களாக ஆகிவிட்டோம். எல்லாம் வரி விதிப்புகளால்தான். எல்லோரும் புரிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன் என கூறினார்.
இந்த வரி விதிப்புகளால் 65 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் (ரூ.58 லட்சத்து 43 ஆயிரம் கோடி) நம் நாட்டுக்குள் வந்துள்ளது அல்லது வர போகிறது என நான் அறிக்கை அளிக்க போகிறேன் என்றும் கூறினார்.






