மெலிஸ்சா புயலால் கரீபியன் நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவு; 4 பேர் பலி


மெலிஸ்சா புயலால் கரீபியன் நாடுகளில் வெள்ளம், நிலச்சரிவு; 4 பேர் பலி
x

மெலிஸ்சா புயல் தொடர்ச்சியாக, ஹைதியில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

வாஷிங்டன் டி.சி.,

கரீபியன் நாடுகளில் வெப்ப மண்டல புயல்களின் தாக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மெலிஸ்சா என பெயரிடப்பட்ட புயல் கரீபியன் நாடுகளை இலக்காக கொண்டு தாக்கி வருகிறது. இதனால், ஹைதி, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த புயலால் தொடர் மழை, பலத்த காற்று ஆகியவற்றுடன் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் பேரிடர்களும் ஏற்பட்டு உள்ளன. புயல் தொடர்ச்சியாக, ஹைதியில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அவர்களில் 2 பேர் தலைநகர் போர்ட் ஆப் பிரின்ஸ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானார்கள். மற்றொருவர் மேரிகாட் பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் சிக்கி பலியானார்.

இதேபோன்று, டோமினிகன் குடியரசு நாட்டில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதனால், மெலிஸ்சா புயலால் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. மற்றொருவரை காணவில்லை. அவரை தேடி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புயலானது மணிக்கு 5 கி.மீ. என்ற வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால், வடக்கு கரீபியன் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

ஜமைக்கா மற்றும் ஹைதியின் தென்பகுதிகள் மற்றும் டோமினிகன் குடியரசு ஆகிய நாடுகளில் நாளை முழுவதும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை 64 செ.மீ. வரை மழை பெய்யலாம் என்று தெரிகிறது. இதனால், பேரிழப்புகளை ஏற்படுத்த கூடிய வெள்ளமும் ஏற்படும் சாத்தியம் உள்ளது என தேசிய புயல் மையத்தின் துணை இயக்குநர் ஜேமீ ரோம் கூறினார்.

1 More update

Next Story