தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தல்

கோவா இரவு விடுதி தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
பாங்காக்,
கோவாவின் அர்போரா பகுதியில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற இரவு விடுதியில் கடந்த 6ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் விடுதி ஊழியர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விடுதியில் போதிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத விடுதி மேனேஜர்கள் , ஊழியர்கள் உள்பட 5க்கும் மேற்பட்டோரை கைது செதனர். அதேவேளை, விடுதி உரிமையாளர்களான கவுரவ் லூத்ரா, சவுரப் லூத்ரா தாய்லாந்து தப்பிச்சென்றனர். அவர்களை கைது செய்ய இண்டர்போல் உதவியுடன் தாய்லாந்து அரசை இந்தியா நாடியது. இதனை தொடர்ந்து கடந்த 11ம் தேதி கவுரவ் லூத்ரா, சவுரப் லூத்ரா இருவரையும் தாய்லாந்து போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட கவுரவ் லூத்ரா, சவுரப் லூத்ரா இருவரும் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர். பாங்காக் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கவுரவ் லூத்ரா, சவுரப் லூத்ரா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். டெல்லி வந்த உடன் இருவரும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.






