தாய்லாந்து ராணி காலமானார் - தலைவர்கள் இரங்கல்


தாய்லாந்து ராணி காலமானார் - தலைவர்கள் இரங்கல்
x

தாய்லாந்தில் மன்னராட்சி முறை அமலில் உள்ளது.

பாங்காக்,

தாய்லாந்தில் மன்னராட்சி முறை அமலில் உள்ளது. அந்நாட்டின் மன்னராக மஹ வஜிரலொங்கொர்ன் செயல்பட்டு வருகிறது. இவரது தாயார் சிரிகிட் கிடியாகரா (வயது 93). இவர் தாய்லாந்து ராணியாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராணி சிரிகிட் கிடியாகரா நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராணி சிரிகிட் மறைவையடுத்து மலேசியாவில் நாளை நடைபெற உள்ள ஏசியான் உச்சிமாநாட்டில் தாய்லாந்து பிரதமர் அனுடின் சருன்விரகுல் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ராணி சிரிகிட் கிடியாகராவின் கணவரான தாய்லாந்து முன்னாள் மன்னர் அதுல்யடிஜ் கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story