அமெரிக்கா: நியூயார்க் நகர மேயராக மம்தானி பதவியேற்பு

34 வயதில் நியூயார்க் நகர மேயராக பொறுப்பேற்ற முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெறுகிறார்.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஜொரான் மம்தானி இன்று காலை முறைப்படி பதவியேற்று கொண்டார். அந்நாட்டின் புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டிய சில மணிநேரத்தில் அவருடைய பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது மம்தானியின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பத்திரிகை நிருபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 34 வயதில் நியூயார்க் நகர மேயராக பொறுப்பேற்ற முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.
அவருக்கு மாகாண வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் லெட்டீசியா ஜேம்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். மம்தானியின் தாயார் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் என்பதுடன், நகரின் சில பகுதிகளில் இலவச பஸ்களை கொண்டு வந்த பெருமைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
அவரை போன்று, மம்தானியும் இலவச பஸ்களை நகரங்களுக்கு கொண்டு வருவார் மற்றும் அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்துவார் என மக்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.






