இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது: பாகிஸ்தான் மந்திரி அடாவடி பேச்சு


இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது: பாகிஸ்தான் மந்திரி அடாவடி பேச்சு
x

இந்தியாவுடன் மீண்டும் போர் வந்தால் முன்பை விட சிறப்பாக செயல்படுவோம் என்று காவ்ஜ ஆசிப் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இதையடுத்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய இந்த தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதையடுத்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்களை கொண்டு தாக்க முயன்றது. பாகிஸ்தானின் இந்த அடாவடிக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 3 நாள் நீடித்த இந்த சண்டையில் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியாவிடம் சண்டை நிறுத்தம் செய்யுமாறு பாகிஸ்தான் கோரியது. இதன் பிறகே இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில், இந்தியா பாகிஸ்தானுடன் கொண்டிருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும், வர்த்தக உறவையும் முறித்துக்கொண்டது.இதனால் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், சமீபகாலமாக இந்தியாவுக்கு எதிராக ஆத்திரமூட்டும் கருத்துக்களை கூறி வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப் அடாவடியாக பேசியுள்ளார்.

காவ்ஜா ஆசிப் கூறியதாவது:“இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்படுவதை மறுக்க முடியாது. மீண்டும் போர் வந்தால், முன்பை விட சிறந்த முடிவை அடைவோம்,” என்று அடாவடியாக பேசியுள்ளார்.

1 More update

Next Story