வெள்ளை மாளிகையில் கண்களை மூடிய படி அமர்ந்து இருந்த டொனால்டு டிரம்ப்: கலாய்த்த நெட்டிசன்கள்

சமீப காலமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உடல் நிலை பற்றி அவ்வப்போது பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன.
வெள்ளை மாளிகையில் கண்களை மூடிய படி அமர்ந்து இருந்த டொனால்டு டிரம்ப்: கலாய்த்த நெட்டிசன்கள்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இருக்கையில் கண்களை மூடியபடி அமர்ந்து இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் டிரம்ப் இருக்கையில் அமர்ந்து குட்டித் தூக்கம் போட்டுவிட்டதாக கலாய்த்து மீம்களை பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில், டிரம்பின் உடல் நலம் கவலை அளிப்பதாகவும், பணி நேரத்தில் அவரது செயல்பாடு அதிருப்தி அளிப்பதாகவும் டிரம்ப் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை உடல் எடை குறைப்புக்கான மருந்து பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றபோதுதான் டிரம்ப் லேசாக கண்ணை மூடியதாகவும், இது தொடர்பான புகைப்படங்களை வைத்து எதிர்க்கட்சிகள் தற்போது விமர்சனத்தை முன்வைத்து வருவதாக டிரம்பின் குடியரசுக் கட்சியினர் கூறி வருகின்றனர்.

சமீப காலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உடல் நிலை குறித்து அவ்வப்போது பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிரம்பின் கையில் காயம் இருப்பது தொடர்பான புகைப்படங்கள் பரவின. அவருக்கு இரத்த நாளங்களில் பிரச்சினை இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. 

டிரம்ப்பின் உடல்நிலை குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. அதில், டொனால்ட் டிரம்ப் நாள்பட்ட சிரை (ரத்த நாளம்) குறைபாடு (chronic venous insufficiency) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com