பராமரிப்பு பணி.. ஈஷா யோகா மையத்தில் நாளை மறுநாள் தரிசனம் ரத்து


Isha Yoga Center Darshan cancelled
x
தினத்தந்தி 25 Jun 2024 4:47 PM IST (Updated: 25 Jun 2024 5:07 PM IST)
t-max-icont-min-icon

ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மறுநாள் மூடப்படுகிறது.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக, தியானலிங்கம், லிங்கபைரவி மற்றும் ஆதியோகியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என ஈஷா யோகா மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஈஷா சார்பில் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஈஷாவில் உள்ள தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்களில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் நாளை மறுநாள் (ஜூன் 27-ம் தேதி) ஒரு நாள் மட்டும் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி வளாகங்கள் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்.

இதனால், அன்றைய தினம் பக்தர்கள் ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஜூன் 28-ம் தேதி முதல் பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு ஈஷா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story