'மகாராஜா' பட ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பு!


மகாராஜா பட ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பு!
x
தினத்தந்தி 8 July 2024 9:39 AM GMT (Updated: 8 July 2024 10:48 AM GMT)

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவான இது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்குக் கிடைத்த பெரிய வரவேற்பால் பல திரையரங்குகளில் மகாராஜாவுக்கான காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், 'மகாராஜா' திரைப்படம் ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

விஜய், ஷாருக்கான் போன்ற ஸ்டார் நடிகர்களுடன் இவர் நடித்திருந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியான படங்களை விட வில்லனாக நடித்து வெளியான படங்கள் தான் அதிக வசூலை வாரிக் குவித்தன. ஆனால் தற்போது விஜய் சேதுபதி சிங்கிளாக களம் இறங்கிய அவருடைய ஐம்பதாவது படமான 'மகாராஜா' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜூலை 12-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story