ரேபரேலி: அனுமன் கோவிலில் ராகுல்காந்தி வழிபாடு
ரேபரேலி வாக்குச்சாவடியில் ராகுல்காந்தி ஆய்வு மேற்கொண்டார்.
ரேபரேலி,
நாட்டில் 18-வது மக்களவையைத் தேர்வு செய்ய ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நாடாளுமன்றத்திற்க்கான 5-வது கட்ட தேர்தல் ரேபரேலி, அமேதி உள்பட 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து லக்னோ விமான நிலையத்துக்கு இன்று காலை வருகை தந்த ராகுல் காந்தி, சாலை வழியாக ரேபரேலிக்கு சென்றார். அனுமன் கோவிலில் தரிசனம் செய்த ராகுல் காந்தி, மகாத்மா காந்தி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட பல வாக்குச் சாவடிகளையும் சென்று ராகுல் காந்தி ஆய்வு மேற்கொண்டார்.
ராகுல்காந்தி ஒரு வாக்குச்சாவடிக்கு சென்றபோது செல்பி எடுப்பதற்காக அவரை சுற்றி பலர் திரண்டனர். இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், பியூஸ்கோயல், ஸ்மிரிதி இரானி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா பல முக்கிய தலைவர்களின் தேர்தல் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ராகுல் காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான வயநாட்டில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.