கற்றுக்கொள்ள வேண்டிய கம்ப்யூட்டர் மொழிகள் என்னென்ன..?


கற்றுக்கொள்ள வேண்டிய கம்ப்யூட்டர் மொழிகள் என்னென்ன..?
x
தினத்தந்தி 16 Aug 2025 4:43 PM IST (Updated: 16 Aug 2025 4:45 PM IST)
t-max-icont-min-icon

மென்பொருள், இணையதளங்கள், மற்றும் பிற தொழில்நுட்பங்களை உருவாக்க கம்ப்யூட்டர் மொழிகள் உதவுகின்றன.

கணினி மொழிகள் என்பது, மனிதர்கள் கணினிகளுடன் தொடர்பு கொள்ளவும், குறிப்பிட்ட பணிகளைச் செய்ய கணினிகளுக்கு வழிமுறைகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் மொழிகள். இவை, மென்பொருள், இணையதளங்கள், பயன்பாடுகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களை உருவாக்க உதவுகின்றன. எல்லாமே கம்ப்யூட்டர் கோடிங் என்றாகிவிட்ட இந்த சூழலில், கல்லூரி படிக்கும்போதே கற்றுக்கொள்ள வேண்டிய, 5 கோடிங் மொழிகளை பற்றி அறிந்து கொள்வோம்.

பைத்தான் (Python)

இது டேட்டா சயின்ஸ், மிஷின் லேர்னிங் எனப்படும் இயந்திர கற்றல், வெப் டெவலெப்மெண்ட் (வலை மேம்பாடு) மற்றும் ஸ்கிரிப்டிங் போன்ற பல துறைகளில் பயன்படுகிறது.

ஜாவா (Java)

பெரிய நிறுவனங்களை மென்பொருள் ரீதியாக கட்டமைக்க உதவும். ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகளை உருவாக்கவும், சர்வர்-சைட் அப்ளிகேஷன்களை இயக்கவும், கட்டமைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஜாவா ஸ்கிரிப்ட் (JavaScript)

வலைத்தளங்களின் முன் பக்கம் மற்றும் பின் பக்க (பேக் எண்ட் கோடிங்) மேம்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

சி++ (C++)

விளையாட்டுகளை புரோகிராமிங் செய்ய, எலெக்ட்ரானிக் கருவிகளை, சிஸ்டமை புரோகிராமிங் செய்ய பயன்படுகிறது. கணினிகளின் செயல்திறனை கட்டுப்படுத்தும் கண்ட்ரோலிங் மென்பொருள் உருவாக்கத்திலும் பயன்படுகிறது.

சி (C)

விண்டோஸ் தளத்திற்கான பயன்பாடுகள், கேம் மேம்பாடு, மற்றும் டெஸ்க்டாப்களில் பயன்படுத்தப்படுகிறது.

கோ (Go)

கிளவுட் கம்ப்யூட்டிங், சர்வர்-சைட் பயன்பாடுகள் மற்றும் மைக்ரோ சர்வீஸ்களில் பயன்படுத்தப்படுகிறது.

சிவிப்ட் (Swift)

ஆப்பிள் எலெக்ட்ரானிக் பொருட்களை இயக்கும் ஆப்பிள் ஐ.ஓ.எஸ்., மேக் ஓ.எஸ்., ஆப்பிள் வாட்சு ஓ.எஸ். மற்றும் டி.வி.ஓ.எஸ். ஆகியவற்றை கட்டமைக்கவும், மாற்றியமைக்கவும் பயன்படுகிறது.

1 More update

Next Story