2-வது டி20: ஹேசில்வுட் மிரட்டல்.. விக்கெட்டுகளை கொத்தாக இழந்து தடுமாறும் இந்தியா


2-வது டி20: ஹேசில்வுட் மிரட்டல்.. விக்கெட்டுகளை கொத்தாக இழந்து தடுமாறும் இந்தியா
x

ஆஸ்திரேலியா - இந்தியா 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை (1-2) இழந்தது. அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் ரத்தானது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இதில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட சுப்மன் கில் ஏமாற்றினார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ கண்டத்திலிருந்து தப்பித்த அவர் 5 ரன்களில் கேட்ச் ஆனார்.

அவரை தொடர்ந்து வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தனர். சஞ்சு சாம்சன் (2 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1 ரன்), திலக் வர்மா டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். மிரட்டலாக பந்துவீசிய ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளும், நாதன் எல்லிஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

தற்போது வரை இந்திய அணி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் அடித்து தடுமாறி வருகிறது. அபிஷேக் சர்மா 24 ரன்களுடனும், அக்சர் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

1 More update

Next Story