ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட்; தென் ஆப்பிரிக்க பிளேயிங் லெவன் அறிவிப்பு

image courtesy: @ProteasMenCSA
கேசவ் மகராஜ் காயம் காரணமாக விலகியதால் இந்த அணியை வியான் முல்டர் வழிநடத்துகிறார்.
புலவாயோ,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புலவாயோவில் இன்று தொடங்குகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா முனைப்பு காட்டும். அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றிக்காக ஜிம்பாப்வே கடுமையாக போராடும். இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. கேசவ் மகராஜ் காயம் காரணமாக விலகியதால் இந்த அணியை வியான் முல்டர் வழிநடத்துகிறார். இந்த அணியில் 2 அறிமுக வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்: டோனி டி சோர்சி, லெசெகோ செனோக்வானே, வியான் முல்டர் (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், டெவால்ட் ப்ரெவிஸ், கைல் வெர்ரேய்ன் (விக்கெட் கீப்பர்), செனுரன் முத்துசாமி, கார்பின் போஷ், பிரனெலன் சுப்ரயன், கோடி யூசுப்.