3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்

2-வது ஒரு நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
லண்டன்,
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. லீட்சில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்த நிலையில் , இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 27 ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை சொந்தமாக்கிய தென்ஆப்பிரிக்க அணி தொடரை முழுமையாக கைப்பற்ற ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும். இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






