4வது டெஸ்ட்; கருண் நாயருக்கு பதிலாக அந்த 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் - ரவி சாஸ்திரி கருத்து


4வது டெஸ்ட்; கருண் நாயருக்கு பதிலாக அந்த 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் - ரவி சாஸ்திரி கருத்து
x

கோப்புப்படம்

தினத்தந்தி 16 July 2025 9:15 AM IST (Updated: 16 July 2025 9:16 AM IST)
t-max-icont-min-icon

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

புதுடெல்லி,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் தற்போது வரை 3 ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இதன் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி தொடங்குகிறது.

நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடி வந்த கருண் நாயர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றம் அளித்துள்ளார்.

இதனால் அடுத்த போட்டியில் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியதாவது, அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் மூன்றாவது இடத்தில் யாரை களமிறக்க வேண்டும்? என்கிற யோசனை இந்திய அணிக்கும் இருக்கும்.

அதிலும் குறிப்பாக கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் அல்லது துருவ் ஜுரெல் ஆகிய இருவரில் யாரையாவது ஒருவரை களம் இறக்க கண்டிப்பாக அணி நிர்வாகம் யோசித்து வருவார்கள் என்று நினைக்கிறேன். துருவ் ஜுரெல் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார். எனவே அவருக்கு முழுநேர பேட்ஸ்மேனாக வாய்ப்பு கொடுக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story