5-வது டெஸ்ட்: பும்ரா விளையாடுவாரா..? வித்தியாசமான பதிலை கூறிய சுப்மன் கில்


5-வது டெஸ்ட்: பும்ரா விளையாடுவாரா..? வித்தியாசமான பதிலை கூறிய சுப்மன் கில்
x

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டிருந்தது.

மான்செஸ்டர்,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இந்திய அணி விளையாட உள்ளது. இதனிடையே இந்த போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார? என்பது கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் இந்த தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்டது.

அதன்படி அவர் ஏற்கனவே 3 போட்டிகளில் (1, 3 மற்றும் 4) விளையாடி விட்டார். இதன் காரணமாக அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அவர் களமிறங்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா? என்று இந்திய கேப்டன் சுப்மன் கில்லிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுப்மன் கில் வித்தியாசமான பதிலை கூறினார்.

இது குறித்து கில் பேசியது பின்வருமாறு:- "அவர் (பும்ரா) முழுமையான உடற்தகுதியுடன் இருந்து தன்னால் விளையாட முடியும் என்று உணர்ந்தால், அது எங்களுக்கு மிகவும் நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர் விளையாடவில்லை என்றாலும், எங்களிடம் சரியான பந்துவீச்சு தாக்குதல் இருப்பதாக நான் இன்னும் நினைக்கிறேன்" என்று கூறினார்.

1 More update

Next Story