செல்பி எடுத்த ரசிகர்.. ஆத்திரத்தில் பும்ரா செய்த செயல்.. வீடியோ வைரல்


செல்பி எடுத்த ரசிகர்.. ஆத்திரத்தில் பும்ரா செய்த செயல்.. வீடியோ வைரல்
x

பும்ராவின் இந்த செயல் வலைதளத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் ஆடிய அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக அடுத்த போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இருப்பினும் நாளை நடைபெற உள்ள கடைசி போட்டியில் ஆடுவாரா? இல்லையா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா, விமான நிலையத்தில் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் போனை பறிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

அந்த வீடியோவில், ரசிகர் ஒருவர் பும்ராவை தனது மொபைல் போனில் செல்பி வீடியோ எடுக்கிறார். அதனை விரும்பாத பும்ரா முதலில் ரசிகரிடம் எதோ கூறுகிறார். இருப்பினும் அந்த ரசிகர் வீடியோ எடுப்பதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பும்ரா ரசிகரின் போனை பறித்தார். இந்த வீடியோ வைரலானது.

பும்ராவின் இந்த செயல் வலைதளத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பலர் பும்ராவுக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

1 More update

Next Story