ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 2ம் முறை நடந்த அபூர்வம்..!

ஆமதாபாத்தில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆமதாபாத்,
ஒருநாள் கிரிகெட் போட்டி வரலாற்றில் 2ம் முறையாக ஒரு ஆபூர்வ சம்பவம் ஒரு நிகழ்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் இந்திய துணைக்கண்டத்தை சேர்ந்த நாடுகளான இந்தியா (Ind vs Eng), பாகிஸ்தான் (Pak vs SA), இலங்கை (Sl vs Aus) ஆகியவை வெற்றிபெற்றுள்ளன. இதற்கு முன் 1996 உலகக்கோப்பையின் போது மார்ச் 6ம் தேதி இந்த 3 அணிகளும் வெற்றிபெற்றிருந்தன.
நேற்று ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் கொழும்பில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கராச்சியில் நடந்த மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்படி ஒரே நாளில் இந்திய துணைக்கண்டத்தை சேர்ந்த 3 நாடுகள் வெற்றிபெற்றிருந்தன.
முன்னதாக கடந்த 1996 உலகக்கோப்பையின் போது இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இலங்கை அணி, கென்யா அணியை 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. பாகிஸ்தான் அணி, கென்யா அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.






