ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஸ்ரீகாந்த்.. முன்னணி ஆல் ரவுண்டருக்கு இடமில்லை

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
சென்னை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதன் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இதில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தேர்வு செய்துள்ளார். அவரது அணியில் முன்னணி ஆல் ரவுண்டரான ஷிவம் துபேவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளார். அத்துடன் அவர் சஞ்சு சாம்சனை 5-வது பேட்டிங் வரிசையிலேயே தேர்வு செய்துள்ளார்.
ஸ்ரீகாந்த் தேர்வு செய்த பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
அபிஷேக் சர்மா, சுப்மன் கில். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி.






